பதிவு செய்த நாள்
17
மார்
2014
11:03
காரிமங்கலம்: காரிமங்கலம் மலைக்கோவிலில், பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று நடந்தது. காரிமங்கலம் ஸ்ரீ அபிதா குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய ஸ்வாமிக்கு, பங்குனி உத்தர திருவிழா, கடந்த, 10ம் தேதி துவங்கியது. விழாவில், முக்கிய நாளான நேற்று காலை ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. மதியம், 12 மணிக்கு, ஸ்வாமி ரத ஏறும் நிகழ்ச்சியை, எம்.எல்.ஏ., அன்பழகன் துவக்கி வைத்தார்.மதியம், 1 மணிக்கு, தானப்ப கவுண்டர் மெட்ரிக் பள்ளி சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை, பள்ளி தாளாளர் மல்லிகா அன்பழகன் துவக்கி வைத்தார். இதில், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர்கள் வசந்தன், ரவிசங்கர், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் பொன்னுவேல், வீட்டு வசதி சங்க தலைவர் காந்தி, கவுன்சிலர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இரவு, 7 மணிக்கு வண்ண விளக்குகளால், அலங்கரிக்கப்பட்ட தேரில், ஸ்வாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. நிறைவு நாளான இன்று ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், கொடி இறக்கவும், மதியம், 12 மணிக்கு முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணன் குடும்பத்தின் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.விழாக்குழு தலைவர் எம்.எல்.ஏ,, அன்பழகன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் செந்தில்குமார், சீனிவாசன், குருக்கள் புருஷோத்தமன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.