திருநரையூர் நாச்சியார் கோவிலில் பங்குனி தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2014 02:03
திருவிடைமருதூர்: கும்பகோணம் அருகே உள்ள திருநரையூர் எனப்படும் நாச்சியார் கோவிலில் பிரசித்திப்பெற்ற கல் கருடசேவை கடந்த 11ம் தேதி நடைபெற்றது. விழாவின் 9-ம் நாளான நேற்று அதிகாலை தேரடியில் பெருமாள், தாயார் எழுந்தருளினர். தொடர்ந்து தேரில் எழுந்தருளிய பெருமாள், தாயாருக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. பின்பு காலை 9.10 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.