விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2014 03:03
திருவாரூர்: திருவாரூர், விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் தியாகராஜர் கோவிலுக்கு சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. தில்லை நடராஜபெருமான் ஆனந்த திரு நடனத்தைக் கண்ட பதஞ்சலி வி யாக்கிரபாத மகரிஷிகள் சிவபாதம் காண, ஆருர் வந்து மார்கழித்திங்கள் திருவிளமலில் அஜபாவன நர்த்தனமாடி சிவபெருமான் (நடராஜர்) பதஞ்சலி-வியாக்கிரபா மகரிஷிகளுக்கு ரத்ரபாதம் காட்டி விளமலில் அருளியதும், திருவாரூரில் தியாகேசப்பெருமான் பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக் கு திருவடிக்காட்டி அருளியதை ஆருத்ரா தரிசனமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
மார்கழி மாத திருவாதிரை நாளன்று பிறவியில் இந்த திருப்பாத தரிசனத்தை காண்பவர்கள் சாப, பாவ விமோசனம் பெற்று முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம். திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன பெருவிழாவும், பங்குனி உத்திரத்தில் சிறப்பு அபிஷேக நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. 16ம்தேதி இரவு 7.30 மணிக்கு திருச்சபையில் நடராஜபெருமான் பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக்கு சிறப்பு அபிஷேகமும், இன்று (17ம்தேதி) அதிகாலை பதஞ்சலி வியாக்ரபாதர் மற்றும் மதுரபாஷினி அம்பாளுக்கும் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பின் காலை 4.45 மணிக்கு பதஞ்சலி வியாக்கிரபாத மகரிஷிகள் தியாகராஜர் கோவிலுக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தியாகராஜர் கோவிலில் நடந்த தரிசன நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.