பதிவு செய்த நாள்
18
மார்
2014
11:03
சேலம்: சேலம், கருப்பூர், கரும்பாலையில் உள்ள அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், கிருஷ்ணரின் கலியுக அவதாரமான பகவான் சைதன்ய மகா பிரபுவின், அவதார தினம் கொண்டாடப்பட்டது.பகவான் கிருஷ்ணன், கலியுகத்தில் கட்டுண்ட ஆத்மாக்களை விடுவிப்பதற்காக, கடந்த, 500 ஆண்டுக்கு முன், மேற்கு வங்காளத்தில் உள்ள மாயாபூரில் கிருஷ்ண சைதன்ய மகாபிரபுவாக அவதரித்தார்.இந்த நாளை, உலகம் முழுவதும் உள்ள இஸ்கான் கோவில்களில், விமரிசையாக கொண்டாடப்படும். சேலம், கருப்பூரில் உள்ள இஸ்கான் கோவிலிலும் அவதார தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாலை, 5 மணிக்கு பஜனையுடன் விழா துவங்கியது. பின்னர், அபிஷேகம், சைதன்ய உபன்யாசம், குருகுல மாணவர்களின் நாடகம் மற்றும் ஆரத்தியுடன் விழா முடிந்தது.