பதிவு செய்த நாள்
18
மார்
2014
11:03
ராசிபுரம்: ராசிபுரம், செல்லியம்மன் கோவிலில், புதியதாக வடிவமைக்கப்பட்ட திருத்தேர் வெள்ளோட்டம், நேற்று நடந்தது.ராசிபுரம், செல்லியம்மன் கோவிலுக்கு திருத்தேர் புதியதாக வடிவமைக்கப்பட்டது. ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், எட்டு அடி கொண்டு புதிய தேர், மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில், உற்சவம் நடத்தப்படும்.அதையடுத்து, நேற்று முன்தினம், உற்சவர் வலம் வர வெள்ளோட்டம் நடந்தது. முன்னதாக, ஸ்வாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. மண்டப கட்டளை தலைவர் பழனியப்பன், துணை தலைவர் வெங்கடாசலம், பரந்தாமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.