சரவணம்பட்டி: கோவை, சரவணம்பட்டி அருகே உள்ள துவாராக பாபா மந்திர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. சரவணம்பட்டி, கீரணத்தம் ரோட்டில் உள்ள என்.எஸ்.கே. நகரில் துவாரகாமாயி பாபா மந்திர் கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தை சீனிவாச சர்மா நடத்தி வைத்தார். விழாவிற்கு நிர்வாக அறங்காவலர்கள் நடராஜன், சிவமணி மற்றும் கட்டபொம்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.