சிவகாசி : திருத்தங்கல் மங்கள பூத்தாழ்வார் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பங்குனித் திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் 108 பால்குடம் எடுத்து வந்து வழிபாடு செய்தனர். சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் பாலாபிஷேகம் நடைபெற்றது. அன்று மாலை 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.