ஒசூர்: சந்திரசூடேஸ்வரர் கோயிலில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த தேர்த்திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தெப்ப உற்சவம் நடைபெற்றது. விழாவில் சந்திரசூடேஸ்வரர் தெப்பக்குளத்தில் மூன்று முறை உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.