பாளையங்கோட்டை: ராஜகோபாலசுவாமி கோயில் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 3-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நாள்தோறும் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திங்கள்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. நேற்று காலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று, பின்பு தீர்த்தவாரி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.