ராஜராஜேஸ்வரி அம்மன் தாலியில் சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2014 10:03
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ராஜராஜேஸ்வரி கோவிலில் அம்மன் தாலியில் சூரிய ஒளி விழுந்தது. கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை வடக்குமாட வீதியில் ராஜராஜேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோயிலில் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்கவும், மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் காரடையான் நோன்பு வழிபாடு நடைபெற்றது. இவ்விழாவில் கோயிலில் உள்ள அம்மன் தாலி மீது சூரிய ஒளி விழுந்ததால், பக்தர்கள் பரவசம் அடைந்தனர். ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.