கும்பகோணம்: சுவாமிமலை வீரமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இக்கோவிலில் கடந்த 1997-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 17ஆண்டுகளுக்கு பிறகு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கோவில் புதுப்பிக்கப்பட்டது. நேற்று காலை 10.10 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.