தென்திருப்பேரை: ஆழ்வார்திருநகரி வண்டிமலைச்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கோயிலில் கடந்த 17ம் தேதி காலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலையில் 4ம் கால யாகசாலை பூஜையும், காலை 9.30 மணிக்கு கோவில் விமானம், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.