வீட்டில் மங்கலநிகழ்ச்சி நடக்கும் போது, யாருக்காக நிகழ்ச்சி நடத்தப்படுகிறதோஅவரின் கையில் மஞ்சள் பூசிய கயிறு கட்டுவது வழக்கம். எவ்வித தீங்கும்நேராமல், தெய்வீக சக்தி காக்க வேண்டும் என்பதற்காக கட்டப்படும் காப்புக் கயிறு இது. ரக்ஷா பந்தனம் என்று இதைக் குறிப்பிடுவர். ஆண்களுக்கு வலக்கையிலும், பெண்களுக்கு இடதுகையிலும் மஞ்சள் கயிறு கட்டப்படும். திருமணம் முடிந்த ஐந்தாம் நாளில் இதை தண்ணீரில் போட்டுவிடுவது அவசியம். அதற்கு மேல் கயிறுகட்டியிருந்தாலும், அதனால் பயனில்லை.