பதிவு செய்த நாள்
24
மார்
2014
02:03
அயோத்தி திரும்பிய ராமன், பட்டம் சூட்டிய பிறகு, சந்தர்ப்ப சூழ்நிலைகளால், கர்ப்பமான தன் மனைவி சீதையை மீண்டும் காட்டுக்கு அனுப்பி விட்டார்.ஒருமுறை, அவன்அரியணையில் அமர்ந்திருந்த போது, ஒரு நாட்டியக்காரி வந்தாள். ஐயனே! ஆடல் பாடல்களால் தங்களை மகிழ்விக்க விரும்புகிறேன், என்றாள். அதை மறுக்க இயலாத ராமன், அவளை ஆடும்படி பணித்தான். அவளும் நடனமாடினாள். அவையோர் மெச்சுமளவு அவளதுபாடலும், நடன பாவனைகளும் அமைந்தன. அந்தத் துன்பச்சூழலிலும் ராமனை அவளது நடனம் கவர்ந்தது.நடனம் முடிந்ததும் பரிசாக ஒரு தங்க மாலையை அளித்தார். அவள் அதனை ஏற்க மறுத்து விட்டாள். பெண்ணே! இதை விட வேறு உயர்ந்ததாக எதிர்பார்க்கிறாயா? தயக்கமின்றி கேள்! நீ என்ன கேட்டாலும் தருகிறேன், என்ற ராமன், நீ இந்த கோசல நாட்டைக் கூடகேட்கலாம், என்றான். அதுவும் வேண்டாம் என்ற அந்தப் பெண்,ராமா!தங்களைப் போலவே எனக்கொரு மகன் வேண்டும், என்றாள். அவையோர் அதிர்ந்தனர். இவளை மணந்தால் தானே, அத்தகைய பரிசை அவள் பெற முடியும். ராமனோ, ஏகபத்தினி விரதனாயிற்றே....! அவர்கள் குழம்பியிருந்த நேரத்தில், எந்த அதிர்ச்சியும் இல்லாத ராமன் எழுந்தான்.அவளது காலடியில் விழுந்து, தாயே! நீகேட்டதைத் தர ஒரு வருடம் காத்திருக்க வேண்டியஅவசியமில்லை. இப்போதே, என்னை மகனாக ஏற்றுக்கொள், என்றாள். ஆடலரசியும் அதிர்ந்தாள், அவையும் மகிழ்ச்சியில் அதிர்ந்தது.எந்த இக்கட்டானசூழலிலும், நாட்டை வழி நடத்தும் புத்திசாலிகள் தான் நம்மை ஆள வேண்டும். தேர்தல் வருகிறது. சிந்திப்பீர்களா!