காய்சினவேந்தபெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2014 01:03
திருப்புளியங்குடி: திருப்புளியங்குடி காய்சினவேந்தபெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 8.45 மணிக்கு மேல தாளங்கள் முழுங்க கோயிலில் கொடியேற்றப்பட்டது. இரவு ஸ்ரீதேவி பூமாதேவியுடன் பெருமாள் வீதி புறப்பாடு நடைபெற்றது. நாளை கருடசேவை நடைபெறுகிறது.