லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் மாணவர்களுக்காக சிறப்பு அர்ச்சனை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2014 11:03
புதுச்சேரி: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் தங்களுடைய ஹால் டிக்கெட்டினை லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் வைத்து வழிபட்டனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று துவங்கி, அடுத்த மாதம் 9ம் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நேற்று காலை 6 மணிக்கு சஹஸ்ரநாம அர்ச்சனை துவங்கியது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது பெற்றோருடன் பங்கேற்றனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட்டினை லட்சுமி ஹயக்ரீவரிடம் வைத்து ஆசிர்வாதம் பெற்று, தேர்வு எழுத சென்றனர். தொடர்ந்து 12.30 மணி வரை சஹஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. சஹஸ்ரநாம அர்ச்சனையில் பங்கேற்ற பக்தர்களுக்கு தமிழில் ஒவ்வொரு நாமாவளிக்கும் விளக்கத்துடன் கூடிய சஹஸ்கரநாட புத்தகம், வெள்ளி டாலர், ரட்சை, எழுது பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.