திருப்பூர்: அவிநாசி ரோட்டில், ஸ்ரீசிருங்கேரி சங்கரமடம், சாரதாம்பாள் கோவில் உள்ளது. இக்கோயிலில் 27 வது ஆண்டு பிரதிஷ்டா தின விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, மலர் அலங்காரத்தில் சாரதாம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.