பதிவு செய்த நாள்
27
மார்
2014
11:03
தியாகதுருகம்: பெரியமாம்பட்டு மாரியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. தியாகதுருகம் அடுத்த பெரியமாம்பட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டது. இந்து அறநிலையத் துறை மூலம் 5.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தனர். மீதமுள்ள பணம் பக்தர்களிடம் நன்கொடையாக பெற்று புதிய தேர் உருவாக்கப்பட்டது. இத்தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. கோவில் முன்பு தேர் சப்பரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. புனித நீர் கலசம் தேரில் வைத்து பக்தர்கள் வடம் பிடித்து ஊர்வலமாக இழுத்து சென்றனர். தர்மகர்த்தா சுப்ரமணியன், அ.தி.மு.க., நகர செயலாளர் சுப்ரமணியன், அவைத்தலைவர் அய்யம் பெருமாள், தே.மு.தி.க., நகர செயலாளர் முருகன், ராஜமாணிக்கம், முருகன், ஜெயராமன், செல்வராஜ், ஜோதி, வெங்கடேசன், முத்தையன், சாரங்கபாணி, நாராயணன், ஏழுமலை, துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.