ஆனைமலை : கோவைமாவட்டத்தில் புகழ்பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்றுமுன்தினம் காலை உண்டியல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் இணை ஆணையர் அனிதா, பேரூர் கோவில் உதவி ஆணையர் ஜீவனாந்தம், பொள்ளாச்சி திருக்கோவில் ஆய்வாளர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. மொத்தம் உள்ள நிரந்தர 16 உண்டியல்களில் 20 லட்சத்து 19 ஆயிரத்து 182 ரூபாயும், தட்டுகாணிக்கை உண்டியலில், எட்டுலட்சத்து 4 ஆயிரத்து 341 ரூபாயும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். தங்கம் 115 கிராமும், வெள்ளி 208 கிராமும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தியிருந்தனர். மாசாணியம்மன் கோவில் இந்தமாத உண்டியல் வருமானம் 28 லட்சத்து 23ஆயிரத்து 523 ரூபாய்.