தீப்பாஞ்சாள் அம்மன் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2014 12:03
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் தீப்பாஞ்சாள் அம்மன் கோவிலில் வரும் 1ம் தேதி மண்டலாபிஷேக நிறைவு பூஜையும், 108 பால்குட ஊர்வலமும் நடக்கிறது. திருவெண்ணெய்நல்லூர் கள்ளுக்கடை மூலை அருகில் பழமையான தீப்பாஞ்சாள் கோவிலில் கடந்த 12.02.2014ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தினமும் மண்டலாபிஷேக பூஜைகள் நடந்தன. வரும் 1ம் தேதி 48ம்நாள் மண்டலாபிஷேக நிறைவு பூஜையும், 108 பால்குட ஊர்வலமும் நடக்கிறது. அன்று காலை 8:00 மணிக்கு முத்துமாரியம்மன் கோவிலிருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியே தீப்பாஞ்சாள் கோவிலை அடைகிறது. காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகமும், மதியம் 12:00 மணிக்கு ஊஞ்சல் சேவையும் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு மண்டலாபிஷேக நிறைவு பூஜையும், மாலை 6:00 மணிக்கு அம்மன் திருவீதியுலாவும் நடக்கிறது.