மயிலம் மயிலியம்மன் கோவில் பங்குனித் திருவிழா துவங்கியது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2014 12:03
மயிலம்: மயிலத்தில் மயிலியம்மன் கோவில் பங்குனி திருவிழா வெகு சிறப்பாக நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று 26ம் தேதி காலை11 மணிக்கு மயிலம் முருகன் கோவிலிருந்து மயிலியம்மன் உற்சவர் சிலையை விழாக் குழுவினர் எடுத்து வந்தனர். மாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனை வழிபாடு நடந்தது. இரவு 9 மணிக்கு காப்பு கட்டுதல் நடந்தது. உற்சவர் வீதியுலா காட்சி நடந்தது. 27ம் தேதி இரவு 10 மணிக்கு மின்விளக்கு விமானத்தில் காட்சியளிக்கிறார். 28ம் தேதி மூன்றாம் நாள் விழாவும், 29ம் தேதி நான்காம் நாள் விழாவில் ஆட்டு கிடா வாகனத்திலும், 30ம் தேதி 5ம் நாள் விழாவில் சிம்ம வாகனத்திலும், 31ம் தேதி மின்சார விளக்குகளினால் அலங்கரித்த ஒடத்திலும், ஏப்.1ம் தேதி முத்துப் பல்லகிலும் வீதியுலா நடக்கிறது. ஏப்.2ம் தேதி மாலை ஊரணி பொங்கல் நடக்கிறது. இரவு 7 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம்,இரவு 10 மணிக்கு திருத்தேரில் அம்மன் வீதியுலா காட்சியும், இரவு 12 மணிக்கு பக்தர்கள் கிராம எல்லை வழிபாட்டிற்கு புறப்படுவர். ஏப்.3ம் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.