பதிவு செய்த நாள்
28
மார்
2014
12:03
காங்கயம் : திருப்பூர் அருகேயுள்ள சிவன்மலையில், நூற்றாண்டு பழமைவாய்ந்த சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம், 2000, செப்., 10ல் நடந்தது. 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதால், கடந்த மூன்று ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்து வந்தன. 50 லட்சம் ரூபாய் செலவில் ராஜ கோபுரம் மற்றும் அதற்கான பெரிய அளவிலான கதவு அமைக்கப்பட்டது. கருவறை விமான கோபுரம், பரிவார சன்னதிகள், விமான கோபுரங்கள், மண்டபம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் வர்ணம் பூசும் பணி, படிக்கட்டு, படிக்கட்டு மண்டபங்கள் ஆகியவை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கும்பாபிஷேகம் நடத்து வதற்காக திருப்பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. அரசிடம் அனுமதி பெறப்பட்டு, தேர்தலுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்தப் படும், என, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.