பதிவு செய்த நாள்
29
மார்
2014
11:03
கும்மிடிப்பூண்டி: பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர், தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சாத்திய சுண்டல் மாலையில், ஒவ்வொரு சுண்டலிலும், அவரின் பொது தேர்வு, பதிவு எண் எழுதப்பட்டு இருந்தது. கும்மிடிப்பூண்டி என்.எம்.எஸ்., நகரில், தட்சிணாமூர்த்தி, லட்சுமி கணபதி கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு, நேற்று முன்தினம், பள்ளி சீருடையுடன் வந்த, 10ம் வகுப்பு மாணவி ஒருவர், தட்சிணாமூர்த்திக்கு, சுண்டல் மாலை சாத்தி, வேண்டினார். பின்னர் அந்த மாலையை கோவில் பூசாரி கழற்றிய போது, அதில் இருந்த சுண்டல்களில் எண்கள் எழுதப்பட்டிருப்பதை கண்டார். அதை உற்று பார்த்தபோது, ஒவ்வொரு சுண்டலிலும், 10ம் வகுப்பு பொது தேர்வு பதிவு எண் எழுதப்பட்டிருந்தது. கோவிலுக்கு வந்த அந்த மாணவி, தன்னுடைய பொது தேர்வு:பதிவு எண்ணை எழுதி, சாமிக்கு அந்த சுண்டல் மாலையை அணிவித்து விட்டு சென்றுள்ளார்.