கண்டாச்சிபுரம்: சிறப்பு திருமுறை முற்றோதல் நிகழ்ச்சிக்கு கண்டாச்சிபுரம் வந்த ஓதுவார் தாமோதரனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கண்டாச்சிபுரம் தமிழ் வேதவார வழிபாட்டுச் சபையின் சார்பில் மாதமொருமுறை முற்றோதல் நிகழ்ச்சி நடந்து வருகிறது.இதன்படி நேற்று நடந்த சிறப்பு திருமுறை முற்றோதல் நிகழ்ச்சிக்கு, திருக்கழுக்குன்றம் தாமோதரன் தலைமை வகித்தார். தமிழகம் முழுவதும் திருமுறை வாசிக்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வரும் ஓதுவார் தாமோதரனுக்கு, வேதவார வழிபாட்டுச்சபை மற்றும் திருத்தல இøகுழுவினரின் சார்பில் முன்னதாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தமிழ் வாரவார வழிபாட்டுச் சபை தலைவர் பழனியாண்டி, செயலாளர் சிவாலிங்கம், ஓதுவார்கள் ஞானசம்பந்தம், கருணாகரன், ஆறுமுகம், பார்த்திபன், திருநாவுக்கரசு கலந்து கொண்டனர்.