பதிவு செய்த நாள்
01
ஏப்
2014
10:04
சபரிமலை: சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா, 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது; வரும் 18 வரை, கோவில் நடை திறந்திருக்கும். சபரிமலையில், பங்குனி உத்திரத்தையொட்டி, 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு விழா, 4ம் தேதி துவங்குகிறது. இதற்காக, 3ம் தேதி, மாலை 5:30 மணிக்கு, நடை திறக்கப்படுகிறது. அன்று, விசேஷ பூஜைகள் எதுவும் இல்லை. வரும் 4ம் தேதி, காலை 5:00 மணிக்கு, நடை திறந்ததும், வழக்கமான பூஜைகளுடன், காலை 9:30 மணிக்கு, கொடியேற்றம் நடக்கிறது. பங்குனி உத்திரத்தை தொடர்ந்து, சித்திரை விஷுவும் வருவதால், திருவிழா நிறைவுக்கு பிறகும், நடை திறந்திருக்கும். 15ம் தேதி, சித்திரை விஷு சிறப்பு பூஜைகள் நடை பெறுகின்றன.