பதிவு செய்த நாள்
01
ஏப்
2014
10:04
திருப்புவனம்: தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட அழகிரியின் மனைவி காந்தி, சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில், நேற்று மதியம் வழிபாடு நடத்தினார். திருப்புவனம் அருகேயுள்ள இந்த பத்ரகாளி அம்மன் கோவிலில் வேண்டினால், "நினைத்த காரியம் கைகூடும் என்ற நம்பிக்கையில், ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தி.மு.க., வில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட அழகிரியின் மனைவி காந்தி அழகிரி, இக்கோவிலுக்கு நேற்று தன் சகோதரியுடன், உச்சிக் கால பூஜையில் பங்கேற்றார். அம்மனுக்கு பட்டாடை சாத்தி, நெய்விளக்கு ஏற்றி, சிறப்பு பூஜை செய்து வழிபட்ட இவர்கள், கோவிலில், 20 நிமிடம் இருந்து விட்டு, காரில் புறப்பட்டனர்.