சிதம்பரம் : பங்குனி மாத வளர்பிறை பிரதமை திங்கள்கிழமை சிதம்பரம் திருக்களாஞ்சேரியில் பிரம்ம தேவரால் வழிபடப் பெற்ற பிரம்ம தீர்த்தத்தில் ஸ்ரீநடராஜர் (ஸ்ரீசந்திரசேகரர்) ரிஷப வாகனத்தில் வருகை தந்து, அவரது முன்னிலையில் ஹஸ்தரராஜருக்கு அபிஷேகம் செய்து பின்னர் குளத்தில் மூழ்கி தீர்த்தவாரி காட்சியளித்தார். பின்னர் அங்கு அமைந்துள்ள ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடுகளும், அன்னதானமும் நடைபெற்றன.