தஞ்சாவூர் : கும்பகோணம் ராமசுவாமி கோயிலில் ஸ்ரீ ராமநவமி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று இரவு இந்திர விமானத்தில் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து ஏப். 11-ம் தேதி வரை காலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. ஏப். 4-ம் தேதி இரவு ஓலை சப்பரத்தில் பெருமாள் - தாயார் புறப்பாடும், 9-- ம் தேதி காலை திருத் தேரோட்டமும், அன்று இரவு தீர்த்தவாரி வைபவமும் நடக்கிறது..