மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் மீனபரணி கொடைவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2014 05:04
நாகர்கோவில்: பிரசக்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் மாசி கொடை விழா கடந்த மார்ச் 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11-ம் தேதி நள்ளிறவு ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது. 8-ம் கொடை கடந்த 18-ம் தேதி நடந்தது. இதைதொடர்ந்து மீனபரணி கொடை விழா நடந்தது. விழாவையொட்டி காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பஞ்சாபிஷேகம், திபாராதனை. அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி மற்றும் உச்சகாலபூஜையும் நடந்தது. நள்ளிரவு 12மணி முதல் 1 மணிக்கு வலியபடுக்கை பூஜையும் நடந்தது. வழிய படுக்கை பூஜை வருடந்தோறும் மாசிக்கொடையின் 6ம் நாள், மீனபரணி கொடை, கார்த்திகை மாத கடைசி வெள்ளி ஆகிய மூன்று முறை மட்டுமே நடப்பதால் இது முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. வலியபடுக்கையின்போது அம்மனுக்கு பிடித்தமான காய் வகைகள் கனி வகைகள், பதார்த்தங்கள், உணவு வகைகள் படைத்து பூஜை செய்வர் மறுநாள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.