சேலம்: சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் மாரியம்மன், காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இந்த ஆண்டுக்கான தேரோட்ட விழா கடந்த மாதம் 18-ந்தேதி தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.