ஈரோடு: ஈரோடு, மாவட்டம் அம்மாபேட்டை பட்டஞ்சாவடியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குண்டம் விழா கடந்த மாதம் 18--ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நேற்று காலை நடைபெற்றது. கோவில் பூசாரி முதலில் குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து ஆண், பெண் பக்தர்கள் வரிசையில் நின்று குண்டம் இறங்கினார்கள். இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. பெண் பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அம்மாபேட்டையை சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.