குளித்தலை: கரூர் மாவட்டம் அய்யர்மலை அருகே பாப்பக்காபட்டி மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதில் முத்தாலம்மன் சாமிக்கு சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டு, பூச்சொரிதல் விழா மற்றும் கோயிலில் கம்பம் நடுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. பிறகு கம்பத்திற்கு, 15 நாட்கள் புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். அதில் முதல்நாள் குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்த குடங்கள் எடுத்து வரப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு மகா மாரியம்மனுக்கு கரகம் பாலிக்கப்பட்டு முத்துபல்லக்கில் கரகாட்டம், காவடி ஆட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் திருவீதி உலா வந்து கோயிலை அடைந்தது. அக்னி சட்டி எடுத்தல், தேரோட்டம், சரம் குத்துதல், படுகளம், பொங்கல் வைத்தல், மற்றும் கிடா வெட்டுதல் உள்பட அம்மனுக்கு பல்வேறு நேர்த்திக்கடன் நிகழ்ச்சிகள் நடந்தன.