பதிவு செய்த நாள்
05
ஏப்
2014
10:04
மயிலம்:மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி திருக் கோவிலில் நேற்று (4ம் தேதி) பங்குனி உத்திரப் பெருவிழா துவங்கியது.காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடுகள் நடந்தது. 6.45 மணிக்கு மயிலம் ஆதினம் கொடி@யற்றி சிறப்பு வழிபாடு, மகா தீபாராதனை செய்தார்.காலை 11 மணிக்கு வெள்ளி விமான உற்சவம், இரவு விநாயகர் உற்சவம், பின்னர் சுவாமி சூரிய விமானத்தில் உற்சவர் கிரிவலம் நடந்தது. இன்று (5ம் தேதி) இரவு 8 மணிக்கு ஆட்டு கிடா வாகனத்தில் உற்சவர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.நாளை (6ம்தேதி) இரவு வெள்ளி பூத வாகன வாகன உற்சவம், 7ம் தேதி இரவு வெள்ளி நாக வாகன உற்சவம் நடக்கிறது. 8ம் தேதி தங்க மயில் வாகன உற்சவம், 9ம் தேதி இரவு வெள்ளி யானை வாகன உற்சவம், 10ம் தேதி இரவு வெள்ளி மயில் வாகன உற்சவம் நடக்கிறது.11ம் தேதி வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவத்திற்கு பின்னர் வெள்ளி குதிரை வாகனத்தில் சுவாமி மலைவல காட்சி நடக்கிறது.
ஏப்.12ம்தேதி காலை 5.45 மணிக்கு மயிலம் ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் திருத் தேரை வடம் பிடித்து துவக்கி வைக்கிறார். 13ம்தேதி தெப்பல் உற்சவம், 14ம்தேதி இரவு முத்துப் பல்லக்கு உற்சவம். 15ம்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்ட சுவாமிகள் செய்து வருகிறார்.