ஊட்டி : ஊட்டி சோலூர் கிராமம் தூபகண்டியில் உள்ள 1947ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட முத்துமாரியம்மன் கோவிலில் வரும் 8ம் தேதி மாலை 6:00 மணியளவில் சுவாமி பிரதிஷ்டை நடக்கிறது. 9ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமம், காலை 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக் கிறது. தொடர்ந்து மகா அபிஷேகம், மகா தீபாராதனை, அன்னபிரசாதம் வழங்குவதல், அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சோலூர் கிராமம் தூபகண்டி ஊர் பொதுமக்கள் மேற்கொண்டுள்ளனர்.