உடுமலை: புதுப்பாளையத்தில்
உள்ள வீரகாமாட்சி அம்மன் கோயில் விழா துவங்கியது. அம்மனுக்கு நாள் தோறும்
சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தன. மார்ச் 29-ம் தேதி தீர்த்தக்குடம்
எடுத்துவரப்பட்டு,அம்மனுக்கு தீர்த்த காணிக்கை செலுத்தப்பட்டது. கடந்த ஏப்.1-ம்
தேதி ஊர் கிணறு வளாகத்தில் சக்தி குப்பம் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும் தொடர்ந்து மாவிளக்கு
பூஜையும், அம்மன் வீதிஉலாவும் நடந்தது. நேற்று பிற்பகல் 3:00 மணிக்கு
மஞ்சள் நீராட்டும், அம்மனுக்கு அபிஷேக பூஜையும் நடந்தன.