பதிவு செய்த நாள்
05
ஏப்
2014
02:04
உடுமலை : மறையூர் சிங்காரவேலன் கோவிலில், பங்குனி உத்திரத்திருவிழா, வரும் 12 மற்றும் 13ம் தேதிகளில் நடக்கிறது. மறையூர், அஞ்சுநாடு, முருகன் மலையில் அமைந்துள்ளது சிங்காரவேலன் கோவில். இக்கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, வரும் 12ம் தேதி மாலை 4.00 முதல் 6.00 மணிக்குள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும் 13ம் தேதி காலை 7.30 மணிக்கு, கோயில்கடவு தென்காசிநாதன் கோவிலில் இருந்து, பால் காவடி குடம், தீர்த்தக்குடம் எடுத்து வரப்படுகிறது. காலை 8.00 மணிக்கு, கணபதி ேஹாமம், மாலா மந்திர ேஹாமங்கள் நடக்கின்றன. 11.30 மணிக்கு பூர்ணாஹுதி, அபிேஷகம், புஷ்ப அலங்காரம் நடக்கின்றன. மதியம் 12.30 மணிக்கு, அன்னதானமும், மாலை 5.30 மணிக்கு, திருவிளக்கு பூஜையும் நடக்கிறது.