கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) வாழ்வில் சுபயோகம்! - 70/100
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2014 06:04
சந்திரனை ஆட்சிநாயகனாகக் கொண்டகடக ராசி அன்பர்களே!
உங்கள் கையில் எவ்வளவு பணம் வந்தாலும் செலவாகி விடும் . பிறரின் அன்பான பேச்சுக்கு அடிபணிவீர்கள். இந்த ஆண்டில் முக்கிய கிரகமான குரு பகவான் 12-ம் இடமான மிதுனத்தில் இருக்கிறார். இது சிறப்பானதல்ல. ஜூன்13ல் குருபகவான் மிதுனத்தில் இருந்து உங்கள் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அவரால் வீண் விரோதம் வரலாம். மந்த நிலை ஏற்படலாம். ஆனால்,குருவின் பார்வை பலத்தால் நன்மை கிடைக்கும். 5-ம் பார்வையால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பொருளாதார வளம் அதிகரிக்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 7-ம்பார்வையால் செல்வாக்கு அதிகரிக்கும். தேவை பூர்த்தியாகும். வாழ்வில் சுபயோகம் உண்டாகும். சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். 9ம் பார்வையால் உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தைவெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். ராகு 4-ம் இடமான துலாமில் இருப்பதால் நன்மை தர இயலாது. ஜூன்21ல் ராகு துலாமில் இருந்துகன்னிக்கு மாறுகிறார். 3-ம் இடம் என்பதால் அவரால், காரியவெற்றி, பொருளாதார வளம், குடும்ப மகிழ்ச்சி, தொழில் விருத்தி உண்டாகும். கேது 10-ம் இடமான மேஷத்தில் இருப்பதால்உடல் உபாதை உருவாகும். ஜூன்21 கேது மேஷத்தில் இருந்து மீனத்திற்குமாறுவதால் நன்மை பல தருவார். சனிபகவான் 4-ம் இடமான துலாமில் உள்ளார். இது சிறப்பான நிலை அல்ல. தற்போது அவர் வக்கிரத்தில் சிக்கி இருப்பதால் சிறப்பாக இயங்க முடியாது. அதனால் கெடுபலன் உண்டாகாது.மாறாக நன்மையே நடக்கும். டிசம்பர் 16ல் சனிபகவான் துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு மாறுகிறார். அவர்திருப்தியற்ற நிலையில்இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வை சிறப்பாக உள்ளது. இதனால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் உறுதுணையாக செயல்படுவர்.பொருளாதார வளம் கடந்த காலத்தைவிட சற்றுஅதிகரிக்கும். ஆனால்அதற்கு சற்று முயற்சி எடுக்கவேண்டியதிருக்கும். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். ஜூன் 21 முதல் சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனாலும் அவ்வப்போது கருத்து வேறுபாடு உண்டாவதை தவிர்க்க முடியாது. வீடு, மனை வாங்கும் முயற்சி தள்ளிப் போகலாம். ஜூன் முதல் தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.
தொழில், வியாபாரம்: தொழில், வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். வியாபாரம் விஷயமாக வெளியூர் பயணம் சென்று வருவர். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை ஆரம்பத்தில் கிடைக்காது. ஆனால் ஜூன் 21 க்கு பிறகு லாபம் அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். அரசின் உதவி கிடைக்கும். எதிரிதொல்லையை எளிதில் முறியடிப்பீர்கள்.
பணியாளர்கள்: உத்தியோகத்தில் சீரான பலனைக் காணலாம். பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உங்கள் திறமைக்கு ஏற்ப மதிப்பு, பாராட்டு இல்லாமல்போகலாம். சிலருக்கு இடமாற்றம் வரலாம்.அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. ஜூன் 21 முதல் முன்னேற்றம் காணலாம். பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். சற்று முயற்சி செய்தால் உங்கள் கோரிக்கை நிறைவேறும்.
கலைஞர்கள்: ஆண்டின் தொடக்கத்தில் சிரத்தைஎடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்களைப் பெறமுடியும். பிற்பகுதியில் நன்மை அதிகரிக்கும்.அரசியல்வாதிகள்: எதிலும் விடாமுயற்சி மேற்கொள்ள வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த பதவி கிடைக்காது. ஜூன் முதல் பணப்புழக்கத்திற்கு எந்தகுறையும் இருக்காது. புதிய முயற்சியில்முன்னேற்றம் காண்பர்.
மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டுஅக்கறையுடன் படிப்பது நல்லது. அதிக உழைப்பு கூடுதல் மதிப்பெண்ணுக்கு வழிவகுக்கும்.
விவசாயிகள்: பொருளாதாரவளத்தில் எந்த குறையும்இருக்காது. ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
பெண்கள்: புத்தாடைஅணிகலன் வாங்கிமகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அமைதியும், பொறுமையும் தேவை. அக்கம்பக்கத்தாரிடம் வீண் வாக்குவாதம்வேண்டாம். உடல்நலம் சிறப்படையும்.மருத்துவச் செலவு குறையும்.
மேலும்
தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை) »