பதிவு செய்த நாள்
12
ஏப்
2025
03:04
அசுவினி: நினைத்தது நிறைவேறும்.. நினைப்பது நடக்கும் தைரியமும், எதையும் சாதிக்கும் வலிமையும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் விசுவாவசு வருடம் மிக யோகமான வருடமாக இருக்கும். நினைத்த வேலைகள் நினைத்தபடி நடக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றமடையும். புதிய சொத்து சேரும். இதுவரை இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.
சனி சஞ்சாரம்:
6.3.2026 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் தடைகள் விலகும். முடங்கிய தொழில் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும். சிறு முயற்சியும் பெரும் லாபம் தரும். அரசியல் வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். கீழ்நிலையில் இருந்தவர்களும் மேல்நிலைக்கு வர முடியும். பணியாளர்களுக்கு நிம்மதி உண்டாகும்.
ராகு, கேது சஞ்சாரம்:
ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்க கேதுவால் நன்மை அடைந்து வரும் நிலையில், ஏப். 26 முதல் ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிப்பதால் லாப ராகு உங்கள் நிலையை உயர்த்துவார். தொட்டதெல்லாம் பொன்னாகும். நினைப்பது நடந்தேறும். வியாபாரம் முன்னேற்றமடையும். சொத்து, சுகம், வாகனம் என கனவுகள் நனவாகும்.
குரு சஞ்சாரம்:
தனம், குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்து அந்தஸ்து, செல்வாக்கை வழங்கும் குரு பகவான். மே 11 முதல் 3ல் சஞ்சரித்து பார்வைகளால் உங்கள் நிலையை உயர்த்துவார். திருமண வயதினருக்கு திருமணம், சிலருக்கு குழந்தை பாக்கியம், தெய்வ அருள், புதிய வீடு, செல்வாக்கு, பணியில் முன்னேற்றம் என யோகப் பலன்கள் உண்டாகும். அக்.8 முதல் கடக ராசிக்கு அதிசாரமாக பெயர்ச்சியாகி நவ.18 வரை உச்சமாக சஞ்சரிப்பவர் 8, 10, 12 ம் இடங்களைப் பார்த்து மறைந்திருந்த உங்கள் செல்வாக்கை வெளிப்பட வைப்பார். வேலைக்காக முயற்சித்து வருபவர்கள் கனவை நனவாக்குவார். தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். சிலர் புதிய தொழில் தொடங்குவர். வீடு மனை என சுபச்செலவுகளை அதிகரிப்பார். நவ.18 முதல் வக்ரமாகி, டிச. 21 அன்று மிதுனத்தில் சஞ்சரித்து 2026 மார்ச் 17 அன்று வக்ர நிவர்த்தி அடையும் குருபகவான் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்குவார். குடும்பத்தில் சுப நிகழ்வுகளை நடத்தி வைப்பார்.
சூரிய சஞ்சாரம்:
2025, ஜூன் 15 - ஜூலை 16, செப். 17 - அக். 17, 2026 ஜன. 15 - மார்ச் 14 காலங்களில் உங்கள் நிலையை உயர்த்துவார். தைரியமாக செயல்பட வைப்பார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்துவார். எதிரிகள் தொல்லையில் இருந்து விடுவிப்பார். வழக்குகளை ஜெயமாக்குவார். புதிய தொழில் தொடங்க வைப்பார். தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். அரசுவழியில் நன்மை தருவார். அரசுப் பணியாளர்கள், அரசியல்வாதிகள் நிலையை உயர்த்துவார். வெளிநாட்டு முயற்சிகளை சாதகமாக்குவார்.
செவ்வாய் சஞ்சாரம்:
2025, ஜூலை 30 - செப்.14, 2026 பிப். 22 - ஏப். 4 காலங்களில் செவ்வாய் 6, 11ல் சஞ்சரிப்பதால் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரம் ஜெயமாகும். தொழில் முன்னேற்றமடையும். பணவரவு அதிகரிக்கும்.
பொதுப்பலன்
விசுவாவசு ஆண்டில் உங்கள் நிலை முன்னேற்றம் பெறும். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வும், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும்.
தொழில்: லாப ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரிப்பதுடன் மிதுன குருவின் பார்வையும் உண்டாவதால் தொழில் முன்னேற்றமடையும். முடங்கிய தொழில் வேகம் எடுக்கும். விற்பனை அதிகரிக்கும். எலக்ட்ரானிக், மெடிக்கல், கெமிக்கல், இயந்திரம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், பங்கு வர்த்தகம், விவசாயம் முன்னேற்றமடையும். வாழ்வில் நிம்மதி உண்டாகும்.
பணியாளர்கள் பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும். எதிர்பார்த்த மாற்றம், உயர்வு கிடைக்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.
பெண்கள்:
விசுவாவசு முன்னேற்றமான ஆண்டாக இருக்கும். கல்வி, வேலை, திருமணம் என கனவுகள் நனவாகும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமணம் புரிவர். குழந்தைக்காக ஏங்கியவர்களின் ஏக்கம் தீரும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும்.
கல்வி
படிப்பில் கூடுதல் அக்கறை உண்டாகும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்கல்வி முயற்சி வெற்றி பெறும். சிறந்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். சிலருக்கு வெளி மாநிலம், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
உடல்நிலை
சனி பகவானின் பார்வைகள் ராசிக்கும் அஷ்டம ஸ்தானத்திற்கும் உண்டாவதால் உடல்நிலை பாதிப்பு தொடரும் என்பதால் பழக்க வழக்கங்களிலும், உணவு உறக்கத்திலும் கவனமாக இருப்பது நல்லது. உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவரை சந்திப்பது அவசியம்.
குடும்பம்: குடும்பத்தில் நெருக்கடி விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். புதிய இடம், வீடு, வாகனம் என கனவு நனவாகும். பொன் பொருள் சேரும்.
பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும்.
பரணி: பணப்புழக்கம் கூடும் .. திறமையால் நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு பிறக்கும் விசுவாவசு வருடம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். சமூக அந்தஸ்து உயரும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றமடையும். திருமண வயதினருக்கு திருமணம் நடக்கும். குழந்தைப்பேறு கிடைக்கும். பணப்புழக்கம் கூடும். பொருளாதார நெருக்கடி விலகும். புதிய சொத்து சேரும். அரசுவழி முயற்சி வெற்றியாகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
சனி சஞ்சாரம்:
சனிபகவான் 6.3.2026 வரை 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். முடங்கிய தொழில் முன்னேற்றம் பெறும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போரின் செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். தொழிலாளர்கள் நிலை உயரும். பணியாளர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உயர்வும், மாற்றமும் கிடைக்கும்.
ராகு, கேது சஞ்சாரம்:
ஏப் 26 முதல் உங்களுக்கு லாப ஸ்தானமான கும்பத்தில் ராகுவும், பூர்வ புண்ணிய ஸ்தானமான சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் ராகு பணவரவை அதிகரிப்பார். முயற்சிகளை வெற்றியாக்குவார். புதிய நட்பால் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார். கனவு நனவாகும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் தருவார். அந்நியரால் ஆதாயம் ஏற்படும். வெளிநாட்டு முயற்சி வெற்றி பெறும். கேது குடும்பத்தில் சல சலப்பையும், பூர்வீக சொத்தில் பிரச்னை, பிள்ளைகளால் சோதனையும் ஏற்படுத்துவார்.
குரு சஞ்சாரம்:
2ல் சஞ்சரித்து குடும்ப நிம்மதி, பணப்புழக்கத்தை அளித்த குரு பகவான் மே 11 முதல் 3ல் சஞ்சரித்து 5, 7, 9 ம் பார்வைகளால் செல்வாக்கை உயர்த்துவார். வீடு, வாகனம் என்ற கனவை நனவாக்குவார். திருமண வயதினருக்கு திருமண யோகத்தையும், சிலருக்கு குழந்தை பாக்கியத்தையும் உண்டாக்குவார். தெய்வ அருளுடன் பெரிய மனிதர்கள் துணையும் கிடைக்கும். எதிர்பார்த்த உயர்வு, பணியில் முன்னேற்றம் என நன்மை உண்டாகும். அக். 8 முதல் 4 ம் இடமான கடகத்திற்கு அதிசாரமாக பெயர்ச்சியாகி நவ.18 வரை உச்சமாக சஞ்சரிப்பவர் 8, 10, 12 ம் இடங்களைப் பார்ப்பதால் உடல்நிலை முன்னேற்றமடையும். செல்வாக்கு வெளிப்படும். வேலைக்கான முயற்சி வெற்றியாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலரால் புதிய தொழில் தொடங்கி லாபமடைய முடியும். வீடு, மனை, வாகனம், பிள்ளைகளின் படிப்பு என சுபச்செலவு அதிகரிக்கும். நவ.18 முதல் கடகத்தில் வக்ரமாகி, டிச. 21 அன்று மிதுனத்தில் சஞ்சரித்து, 2026 மார்ச் 17 அன்று வக்ர நிவர்த்தியாகும் குருபகவான் கனவுகளை நனவாக்குவார். வாழ்வில் முன்னேற்றம் அளிப்பார். செல்வாக்கை அதிகரிப்பார்.
சூரிய சஞ்சாரம்:
2025, ஜூன் 15 - ஜூலை 16, செப். 17 - அக். 17, 2026 ஜன.15 - மார்ச் 14 காலங்களில் சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் தைரியம் கூடும். முயற்சி வெற்றியாகும். உடல் பாதிப்பு மறையும். எதிரிகளை இல்லாமல் செய்வார். இழுபறி வழக்குகளை வெற்றியாக்குவார். புதிய தொழில் முயற்சி நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசுவழி வேலைகள் சாதகமாகும். செல்வாக்கு உயரும். அரசுப் பணியாளர்கள், அரசியல்வாதிகள் நிலை உயரும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும்.
செவ்வாய் சஞ்சாரம்: உங்கள் ராசிநாதனான செவ்வாய் 2025, ஜூலை 30 - செப். 14, 2026 பிப். 22 - ஏப். 4 காலங்களில் 6, 11 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் நினைப்பதை நடத்தி முடிப்பீர்கள். எதிர்ப்பு விலகும். நோய் பாதிப்பு நீங்கும். செல்வாக்கு உயரும். வழக்கு விவகாரத்தில் வெற்றி உண்டாகும். தொழில் முன்னேற்றமடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசு பணியாளர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும்.
பொதுப்பலன்
கடந்தகால நெருக்கடி விலகும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உங்கள்மீது உங்களுக்கே நம்பிக்கை வரும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். வேலைக்காக முயற்சிக்கு எதிர்பார்த்த தகவல் வரும். அரசியல்வாதிகளுக்கு பதவி கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். பணியாளர்களுக்கு உயர்வு உண்டாகும். வாகனம், சொத்து சேரும்.
தொழில்: சனி, ராகு சஞ்சாரத்தால் லாப ஸ்தானம் பலமடையும் நிலையில் மிதுன குருவின் பார்வையும் லாப ஸ்தானத்திற்கு உண்டாவதால் தொழிலில் லாபம் உண்டாகும். விற்பனையாகாத பொருட்கள் விற்பனையாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வாகன விற்பனை, எலக்ட்ரானிக்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், அழகு சாதனம், பைனான்ஸ், இயந்திரம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், சினிமா, யூடியூப், எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், ஆலோசகர்கள், விவசாயத் துறையினர் முன்னேற்றம் காண்பர்.
பணியாளர்களுக்கு ஊதியம் அதிகரிக்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அரசுப்பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.
பெண்கள்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். உறவினர் இடையே செல்வாக்கு கூடும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். உயர்கல்விக் கனவு நனவாகும். சுய தொழில் செய்பவர்கள் நிலை உயரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவர். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடக்கும் குழந்தைப்பேறு கிடைக்கும்.
கல்வி
படிப்பில் அக்கறை உண்டாகும். ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பீர்கள். தேர்வில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நினைத்த பாடப்பிரிவில், நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்கும். படிப்பிற்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்லும் யோகமும் உண்டு.
உடல்நிலை
சனிபகவானின் பார்வையால் உடல்நிலையில் சிறு சங்கடங்கள் தோன்றும். தலை, முகம், மூளை, எலும்பு, முடி, பற்கள் சம்பந்தமாக பாதிப்பு உண்டாக வாய்ப்பிருப்பதால் உடல்நிலையில் கவனம் தேவை.
குடும்பம்: குடும்பத்தில் இருந்த குழப்பம், பிரச்னைகள் முடிவிற்கு வரும். தம்பதியர் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். அடிப்படைத் தேவை பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடந்தேறும். இடம், வீடு, வாகனம் என வாங்குவீர்கள். பொன் பொருள் சேரும்.
பரிகாரம்: பராசக்தியை வழிபட வாழ்வில் சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.
கார்த்திகை: வெற்றி நிச்சயம்.. சூரியன் போல தனித்துவத்துடன் விளங்குபவராக நீங்கள் இருந்தாலும், 1ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு தைரியக்காரகனான செவ்வாய் ராசி நாதனாகவும், 2, 3, 4 ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.
விசுவாவசு ஆண்டில் கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நினைப்பது நடந்தேறும். முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். 2, 3, 4 ம் பாதத்தினருக்கு தொழில் முன்னேற்றமடையும். வேலை வாய்ப்பு உண்டாகும். பட்டம் பதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும்.
சனி சஞ்சாரம்:
கார்த்திகை 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6, 2026 வரை லாப சனியாகவும், 2, 3, 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன சனியாகவும் சஞ்சரிப்பதால், தொழில் உத்தியோகத்தில் அழுத்தம் இருக்கும். வேலைப்பளுவால் சங்கடப்படுவீர்கள் என்றாலும் நியாயமாக உழைப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
ராகு, கேது சஞ்சாரம்: 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.26 முதல் லாப ஸ்தானத்தில் ராகுவும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் ஒரு பக்கம் ஆதாயமும் மறுபக்கம் பிள்ளைகளாலும் பூர்வீக சொத்துகளாலும் மனக்குழப்பம் அதிகரிக்கும். 2, 3, 4 ம் பாதத்தினருக்கு ராகு ஜீவன ஸ்தானத்திலும், கேது சுக ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றமடையும். பணியில் உயர்வு உண்டாகும் என்றாலும் உழைப்பு அதிகரிக்கும். ஓய்வின்றி உழைக்க வேண்டிய நிலை உண்டாகும்.
குரு சஞ்சாரம்: மே 11 மதியம் வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, அதன் பின் மிதுனத்தில் சஞ்சரித்து, அக். 8 முதல் கடகத்திற்கு அதிசாரமாக பெயர்ச்சியாகி, நவ.18 முதல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21 ல் மிதுனத்திற்கு வக்கிரமாகவே செல்பவர் மார்ச் 17, 2026 அன்று அங்கே வக்ர நிவர்த்தியடைகிறார். இதனால் 1 ம் பாதத்தினருக்கு மே 11 வரையிலும், 2, 3, 4 ம் பாதத்தினருக்கு அதன் பிறகும் யோகபலன்கள் உண்டாகும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். குழந்தைப்பேறு கிடைக்கும். பொன் பொருள் சேரும். புதிய வீட்டில் குடியேறும் நிலை உண்டாகும். செல்வாக்கு, அந்தஸ்து, பட்டம், பதவி என்ற கனவுகள் நனவாகும்.
சூரிய சஞ்சாரம்: 1 ம் பாதத்தினருக்கு 2025, ஜூன் 15 – ஜூலை 16, செப். 17 – அக். 17, 2026, ஜன. 15 – மார்ச் 14 காலங்களிலும், 2, 3, 4 ம் பாதத்தினருக்கு ஜூலை 17 – ஆக. 16, அக். 18 – நவ. 16, 2026. பிப். 13 – ஏப். 13 காலங்களிலும் 3, 6, 10, 11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் பலத்தை அதிகரிப்பார். நினைத்ததை நடத்தி வைப்பார். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உணர்வீர்கள். எதிர்ப்பு, போட்டி, மறைமுகத்தொல்லை இல்லாமல் போகும். உடல் பாதிப்பு மறையும். வம்பு வழக்கு சாதகமாகும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் பெறும். லாபம் அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.
செவ்வாய் சஞ்சாரம்: கிரகங்களில் சனி, ராகு – கேது, குருவிற்குப் பின் ஒரு ராசியில் அதிக நாள் நின்று பலன் தருபவர் ரத்தக்காரகனான செவ்வாய்தான். கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு ஜூலை 30 – செப். 14, 2026 பிப். 22 – ஏப். 4 காலங்களில் 6, 11 ம் இடங்களிலும், 2, 3, 4 ம் பாதத்தினருக்கு, 2025, ஏப். 14 – ஜூன் 8, செப். 16 – அக். 27, 2026, ஏப். 1 – ஏப். 13 காலங்களில் 3, 6, 11 ம் இடங்களிலும் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நோய், வழக்கு, நெருக்கடிகள் இருந்த இடம் தெரியாமல் போகும். குடும்பம், தொழில், உத்தியோகம் என அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கு உயரும். வீடு, மனை, வாகன யோகம் உண்டாகும்.
பொதுப்பலன்: வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். அரசு வழி வேலைகள் வெற்றியாகும். திருமண யோகம், குழந்தை பாக்கியம் உண்டாகும். சொத்து சேரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
தொழில்: செய்து வரும் தொழில் முன்னேற்றம் பெறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசு வழியில் அனுமதி கிடைக்கும். இன்டஸ்ட்ரீஸ், ஹார்டுவேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், சினிமா, சின்னத்திரை, பங்கு வர்த்தகம் லாபம் தரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
பணியாளர்கள்: இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். உங்கள் திறமையை நிர்வாகம் மதிக்கும். ஊதிய உயர்வும் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும் என்றாலும் பணியில் நேர்மையாகவும் உழைப்பில் உண்மையாகவும் இருப்பது அவசியம்.
பெண்கள்: திறமைக்கும் தகுதிக்குமான மரியாதை கிடைக்கவில்லையே என்ற எண்ணம் மாறும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். சுய தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.
கல்வி: படிப்பில் அக்கறை கூடும். பொதுத்தேர்வில் நிறயை மதிப்பெண் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் கவனம் அதிகரிக்கும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை: உடல் பாதிப்புகள் மருத்துவத்தால் குணமாகும். பரம்பரை நோயில் இருந்து விடுதலை கிடைக்கும். சுறுசுறுப்பாக செயல்படும் அளவிற்கு உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.
குடும்பம்: கடந்த கால நெருக்கடி விலகும். வரவை வைத்து பழைய கடனை அடைப்பீர்கள். புதிய சொத்து வாங்குவீர்கள். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள்.
பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.................