Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம் : தமிழ்ப்புத்தாண்டு ராசி ... சிம்மம் : தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன் சிம்மம் : தமிழ்ப்புத்தாண்டு ராசி ...
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2025 முதல் 13.4.2026 வரை)
கடகம் : தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன்
எழுத்தின் அளவு:
கடகம் : தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2025
03:04

புனர்பூசம்: முயற்சி வெற்றியாகும்..: ஞானக்காரகனான குருபகவானின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2,3 ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 4ம் பாதமான கடகத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.

பிறக்கும் விசுவாவசு ஆண்டு 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முன்னேற்றமான ஆண்டாக இருக்கும். வியாபாரம், தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். புதிய சொத்து சேரும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும். பொருளாதாரத்தில் குறைவு தோன்றும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, வருமானத்தில் தடை, உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். மறைமுகத் தொல்லை அதிகரிக்கும். விரயச் செலவு கட்டுக்கடங்காமல் போகும்.


சனி சஞ்சாரம்: புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6, 2026 வரை பாக்கிய சனியாகவும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அஷ்டம சனியாகவும் சஞ்சரிப்பதால் 1,2,3 ம் பாதத்தினருக்கு அதுவரை எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். உடல்நிலை சீராகும். பணி இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். தொழிலில் பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். இடம், வீடு, வாகனம் சேரும்.  4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பண நெருக்கடி, குடும்பத்தில் பிரச்னை, பிள்ளைகளால் சங்கடம், பூர்வீக சொத்து பிரச்னை, உடல் பாதிப்பு, மருத்துவச்செலவு, அவமானம்,  தொழிலில் தடை ஏற்படும்.


ராகு, கேது சஞ்சாரம்: புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2025 ஏப். 26 முதல் ராகு பாக்கிய ஸ்தானத்திலும், கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் சமுதாயத்தில் முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். வாழ்க்கையிலும், தொழிலிலும் உண்டான நெருக்கடிகள் நீங்கும். தடைபட்ட வருமானம் வரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகு அஷ்டம ஸ்தானத்திலும், கேது தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் வருமானத்தில் தடை, குடும்பத்தில் பிரச்னை ஏற்படும். உடல்நிலையில் சங்கடம், உங்களுக்கும் கீழ்ப்பட்டவர்களால் அவமானம் சந்திக்க நேரிடும். 


குரு சஞ்சாரம்: 

மே 11 வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11 முதல் மிதுனத்தில் சஞ்சரித்து அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18 அன்று கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்கிரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை செலவு அதிகரித்தாலும் விரும்பியதை அடைய முடியும். உடல் பாதிப்பு விலகும். வழக்கு வெற்றியாகும். அதன்பின் ஜென்ம குருவால் உழைப்பும் அலைச்சலும் அதிகரித்தாலும் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்து கைக்கு வரும். புதிய வீடு, வாகனம் அமையும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை நினைத்தது நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும். திருமணம், குழந்தை என்ற கனவு நனவாகும். சிலருக்கு மறுமணம் நடந்தேறும். சிலருக்கு மருத்துவச்செலவு ஏற்படும். பொன் பொருட்களை விற்று நிலைமைகளை சமாளிக்க வேண்டி வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய நம்பிக்கை உண்டாகும்.


சூரிய சஞ்சாரம்: 

ஆத்ம காரகனான சூரியபகவான், 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 – மே 15,  ஆக.17 – செப்.16, டிச.16 – 2026 ஜன.14, மார்ச் 15 – ஏப்.13 காலங்களிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 – ஜூன்14, செப்.17 – அக்.17, டிச.16 – 2026 ஜன.14 காலங்களிலும் தன் 3, 6, 10,11ம் சஞ்சார நிலைகளால் முன்னேற்றத்தை வழங்குவார். நெருக்கடியில் இருந்து பாதுகாப்பார். முயற்சிகளை வெற்றியாக்குவார். உடல் பாதிப்புகளை விலக்குவார். எதிரிதொல்லைகளை நீக்குவார். வழக்குகளை சாதகமாக்குவார். அரசுவழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்க வைப்பார். வருவாயை அதிகரிப்பார்.


செவ்வாய் சஞ்சாரம்: கிரகங்களில் சனி, ராகு – கேது, குருவிற்குப் பின் ஒரு ராசியில் அதிகநாள் நின்று பலன் தருபவர் செவ்வாய்தான். விசுவாவசு ஆண்டில் புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூன்8 – ஜூலை 30, அக்.27 –  டிச.12 காலங்களிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜூலை30 – செப்.14, டிச.6 – ஜன.14 காலங்களிலும் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். தைரியமாகவும் துணிச்சலாகவும் செயல்படும் நிலை உண்டாகும். வியாபாரம், தொழில், குடும்பத்தில் இருந்த போராட்டநிலை மாறும். கையில் எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர்கள். உடல்  பாதிப்பு விலகும். செல்வாக்கு, அந்தஸ்து உயரும். பிரச்னை, வழக்குகள் இருந்த இடம் தெரியாமல் போகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும்.


பொதுப்பலன்: விசுவாவசு ஆண்டில் உங்கள் செயல்களில் நிதானமும் கவனமும் வேண்டும். பிறரை நம்பி எந்தவொரு வேலையிலும் இக்காலத்தில் ஈடுபட வேண்டாம். தொழிலில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுவது நன்மையாகும். பணியில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். புதிய சொத்து. தொழில் என்ற கனவுகள் நனவாகும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் பிரச்னைகள் மறையும். முயற்சிக்கேற்ற ஆதாயம் உண்டாகும்.


தொழில்:  

தொழில் முன்னேற்றமடையும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, இன்டஸ்ட்ரீஸ், ஹார்டுவேர், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், குடிநீர், ஜூவல்லரி, பங்கு வர்த்தகம், பதிப்பகம், கல்வி நிறுவனம், கமிஷன் ஏஜன்சி,  விவசாயத் துறையில் லாபம் அதிகரிக்கும். 


பணியாளர்கள்: 

உழைப்பு அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர் மாறுதல் ஏற்படும். தற்காலிகப் பணியாளர்கள் மேலதிகாரியின் ஆலோசனையை ஏற்பது நன்மை தரும். தனியார் நிறுவன ஊழியர்கள் தன்னுடன் பணிபுரிபவர்களை அனுசரிப்பது அவசியம். 


பெண்கள்: 

குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு, அரசு வேலை என்ற கனவுகள் நனவாகும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னை விலகும். பொன், பொருள் சேரும். 


கல்வி 

மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். உயர்கல்வி என்ற லட்சியம் நிறைவேறும். விரும்பிய நிறுவனத்தில் இடம் கிடைக்கும்.


உடல்நிலை: 

நீண்ட நாளாக உங்களை சங்கடப்படுத்திய நோய்கள், தொற்று நோய்கள் மருத்துவத்தால் குணமாகும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.


குடும்பம்: 

சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். தம்பதியர் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள்.  பொன், பொருள் சேரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். சேமிப்பை உண்டாக்குவீர்கள்.


பரிகாரம்: ஆலங்குடி குருபகவானை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


பூசம்: நிதானம் அவசியம்.. மனக்காரகனும் கர்மக்காரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு,

பிறக்கும் விசுவாவசு ஆண்டு முயற்சிக்கேற்ற ஆதாயம் காணும் ஆண்டாக இருக்கும். ஒரு பக்கம் நெருக்கடிக்கு ஆளானாலும் மறுபக்கம் அதை சமாளிக்கும் நிலையும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, வருமானத்தில் தடை, உடல் பாதிப்பு, மறைமுகத் தொல்லை அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும்.


சனி சஞ்சாரம்:  

மார்ச் 6, 2026 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் சோதனை அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடை, தாமதம் ஏற்படும். குடும்பத்தில் பிரச்னை தலையெடுக்கும். பிள்ளைகளால் சங்கடம் தோன்றும்.  பூர்வீக சொத்தில் பிரச்னை உண்டாகும். உடல் பாதிப்பு ஏற்படும்.  மருத்துவச்செலவு கூடும். நீங்கள் மிக நம்பியவர்களும் உங்களுக்கு எதிராக மாறுவர். பிறரால் அவமானத்தை சந்திக்கும் நிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் ஏதாவது பிரச்னை உண்டாகும். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடிக்கு ஆளாக்குவர். 


ராகு, கேது சஞ்சாரம்:  2025 ஏப். 26 முதல் ராகு அஷ்டமத்திலும், கேது தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உடல்நிலை, செல்வாக்கு பாதிப்பு ஏற்படும். சிலர் விபத்தில் சிக்குவர். உங்களை அவமானப்படுத்தும் முயற்சியில் சிலர் மறைமுகமாக ஈடுபடுவர். எதிர்பாலினரிடம் தள்ளி இருப்பது நல்லது. தொழிலில் நெருக்கடி உண்டாகும். வருமானத்தில் தடை, குடும்பத்தில் பிரச்னை ஏற்படும். பணியிடத்தில் அவப்பெயர் உண்டாகும் என்பதால் நேர்மையாக இருப்பது அவசியம். குடும்பத்தினரை அனுசரிப்பதும், வார்த்தைகளில் கவனமாக இருப்பதும் நல்லது. 


குரு சஞ்சாரம்: 

மே 11 வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு மே 11 முதல் மிதுனத்தில் சஞ்சரித்து, அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்கிரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17 ல் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் மே 11 வரை நினைத்தது நடந்தேறும். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். திருமணம், குழந்தை என கனவு நனவாகும். சிலருக்கு சொந்த இடம், வீடு அமையும். அதன்பின் விரய குருவால் வீண் செலவு அதிகரிக்கும். உடல் பாதிப்பு விலகும். வழக்கில் வெற்றி ஏற்படும். வேலையில் இருந்த பிரச்னை மறையும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவிற்கு குருவின் பார்வை உண்டாவதால் உங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.


சூரிய சஞ்சாரம்: 

ஆத்ம காரகனான சூரிய பகவான்,  ஏப்.14 – ஜூன் 14, செப்.17 – அக். 17, டிச. 16 – 2026 ஜன.14 காலங்களில் தன் 3, 6, 10, 11 ம் சஞ்சார நிலைகளால் நெருக்கடிகளை நீக்குவார். நன்மைகளை அதிகரிப்பார். முன்னேற்றம் உண்டாக்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். போட்டியாளரால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். வழக்குகளை சாதகமாக்குவார். வருவாயை அதிகரிப்பார். அரசியல்வாதிகளின் செல்வாக்கை உயர்த்துவார். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். 


செவ்வாய் சஞ்சாரம்: கிரகங்களில் சனி, ராகு, கேது, குருவிற்குப்பின் ஒரு ராசியில் அதிகநாள் நின்று பலன் தருபவர் செவ்வாய்தான். விசுவாவசு ஆண்டில், ஜூலை 30 – செப்.14, டிச.6 – ஜன. 14 காலங்களில் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உடல் பாதிப்பு, வியாபார தடை, வேலையில் பிரச்னை விலகும். எந்த ஒன்றையும் எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள். தைரியமும் துணிச்சலும் கூடும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். கையில் எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர்கள். செல்வாக்கு, அந்தஸ்து உயரும். பிரச்னைகள், வழக்குகள் இருந்த இடம் தெரியாமல் போகும்.


பொதுப்பலன்: விசுவாவசு ஆண்டில் அஷ்டம ஸ்தானத்தில் ராகு, சனி, தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் கேது சஞ்சரித்தாலும், குருவின் பார்வைகள், சூரிய, செவ்வாய் சஞ்சாரம் ஆபத்தில் இருந்து பாதுகாக்கும். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். சுய ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருந்தால் நினைத்ததை சாதிப்பீர்கள். என்றாலும் இக்காலத்தில் நிதானம் தேவை. தொழிலில் அக்கறை வேண்டும். புதிய சொத்து, புதிய தொழில் போன்ற கனவுகள் நனவாகும்.


தொழில்:  

தொழிலில் உள்ள பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலர் புதிய தொழில் தொடங்குவர்.  அரசுவழியில்  எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, கால்நடை வளர்ப்பு,  மினரல் வாட்டர்,  பால் வியாபாரம், இன்டஸ்ட்ரீஸ், ஹார்டுவேர், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், பங்கு வர்த்தகம், விவசாயம், ஐ.டி., உதிரிபாக தயாரிப்பு நிறுவனம், வாகன விற்பனை போன்றவற்றில் லாபம் உயரும். கலைஞர்கள், வழக்கறிஞர்களின் நிலை உயரும்.


பணியாளர்கள்: வேலையில் நெருக்கடி அதிகரிக்கும் என்றாலும் குருவின் பார்வைகளும் சூரியனின் சஞ்சார நிலை உங்களைப் பாதுகாக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு ஏற்படும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். என்றாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரிப்பது அவசியம். 


பெண்கள்: 

நீண்டநாள் கனவு நனவாகும். உயர்கல்வி கனவு நனவாகும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். குடும்பத்தில் குழப்பம் விலகும். திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு என கனவு நனவாகும். பொன், பொருள் சேரும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப ஸ்தானத்தில் கேதுவும், மாங்கல்ய ஸ்தானத்தில் ராகுவும் சனியும் சஞ்சரிப்பதால் வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் கவனம் செலுத்துவதும் வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது. 


கல்வி 

ஆசிரியர்கள் ஆலோசனையால் படிப்பில் அக்கறை கூடும். எதிர்காலம் பற்றிய தெளிவு ஏற்படும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி என்ற லட்சியம் நிறைவேறும்.


உடல்நிலை: 

மார்பு, மார்பகம், விலா எலும்பில் பாதிப்பு, வயிற்று பிரச்னை, செரிமான கோளாறு, மூச்சுத்திணறல், மூட்டுவலி, இடுப்புவலி என சங்கடப்படுத்திய நோய்கள் குணமாகும் என்றாலும் சிலர் விபத்துகளையும் சந்திக்க வேண்டி வரும் என்பதால் வாகனப் பயணத்தில்  நிதானம் அவசியம்.


குடும்பம்: 

குடும்ப நலனில் அக்கறை உண்டாகும். பிள்ளைகளுக்கு  திருமணம், குழந்தை பாக்கியம் என கனவுகள் நனவாகும். தம்பதியர் ஒற்றுமை சிறக்கும். புதிய வீடு, வாகனம், பொன் பொருள் என ஆசைகள் பூர்த்தியாகும். சேமிப்பு உயரும்.


பரிகாரம்: அமிர்தகடேஸ்வரரை வழிபட்டால் சங்கடம் விலகி நன்மை சேரும். 


ஆயில்யம்: விடாமுயற்சி தேவை.. வித்யாகாரகனும், மனக்காரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு,

பிறக்கும் விசுவாவசு ஆண்டு கவனமாக செயல்பட வேண்டிய ஆண்டு. தெளிவுடன் திட்டமிட்டு ஈடுபடும் வேலைகளில் ஆதாயம் ஏற்படும். எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதை சமாளிக்கும் நிலை உண்டாகும். வருமானத்தில் தடை, உடல் பாதிப்பு, மறைமுகத் தொல்லைகளை சந்திக்க நேரிடும். ஒவ்வொரு வேலையையும் போராடி முடிக்க வேண்டிய நிலை உண்டாகும். உலகையும் உறவுகளையும் நீங்கள் தெரிந்து தெளிந்திடக் கூடிய நிலை ஏற்படும். உங்களுக்கு நீங்கள் மட்டுமே என்பதை அனுபவத்தில் உணர்வீர்கள்.


சனி சஞ்சாரம்: 

2026 மார்ச் 6 வரை அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் உடல் பாதிப்பு அல்லது உங்கள் செல்வாக்கிற்கும், அந்தஸ்திற்கும் சோதனை ஏற்படும். தொழிலில் பின்னடைவும், வேலையில் பிரச்னைகளும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். பிள்ளைகளால் சங்கடம், பூர்வீக சொத்தில் பிரச்னை தோன்றும். மருத்துவச்செலவு கூடும். கடனால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். 


ராகு, கேது சஞ்சாரம்: 2025 ஏப். 26 முதல் ராகு  அஷ்டமத்திலும், கேது தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் பணவரவில் தடைகள் தோன்றும். வாக்குவாதம், சண்டையால்  குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். உடல்நிலையில் ஒன்றுவிட்டு ஒன்று என பாதிப்புகள் தோன்றும். எதிரிகளின் வலையில் சிக்கி சிலர் அவமானத்திற்கும் ஆளாவர்.  தொழிலில் நெருக்கடி உண்டாகும். பணியாளர்களுக்கு பணியிடை நீக்கம், வழக்கு ஏற்படவும் வாய்ப்பிருப்பதால் வேலையில் நேர்மை, ஒழுக்கம் அவசியம்.


குரு சஞ்சாரம்:

மே 11 வரை ரிஷபத்தில் லாப குருவாக சஞ்சரிப்பவர், மே 11 முதல் மிதுனத்தில் விரய குருவாக சஞ்சரித்து, அக். 8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21 ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்கிரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு கடகத்தில் வக்கிரமாக சஞ்சரிக்கும் போது விரய குருவின் பலனையே தருவார். இதனால், மே 11 வரை உங்கள் நிலையில் உயர்வு இருக்கும்.  நினைத்ததை நினைத்தபடி நடத்தி முடிப்பீர்கள். தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். திருமணம், குழந்தை என்ற கனவு நனவாகும். சிலருக்கு சொந்த இடம், வீடு அமையும். அதன்பின் விரய குருவால் வீண் செலவு அதிகரிக்கும். வழக்கில் வெற்றி ஏற்படும். உடல்நிலை சீராகும். பொன், பொருள் சேரும். அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவிற்கு குருவின் பார்வை உண்டாவதால் எல்லாவிதமான நெருக்கடியும் விலகும்.


சூரிய சஞ்சாரம்:

ஆத்ம காரகனான சூரியன் ஏப்.14 – ஜூன்14, செப்.17 – அக்.17, டிச.16 – 2026 ஜன. 14 காலங்களில் தன் 3, 6, 10, 11ம் சஞ்சார நிலைகளால் உங்கள் நிலையை உயர்த்துவார். தைரியம், தன்னம்பிக்கை கூடும். வம்பு வழக்கில் இருந்து விடுவிப்பார். எதிரி பலம் இழப்பர். உடல்நிலை சீராகும். தொழில், உத்தியோகத்தில் உண்டான சங்கடம் தீரும். அரசுவழி முயற்சிகளை வெற்றியாக்குவார். ஆதாயத்தை அதிகரிப்பார். அரசியல்வாதிகள் முன்னேறுவர். 


செவ்வாய் சஞ்சாரம்: விசுவாவசு ஆண்டில் ஜூலை30 – செப்.14, டிச.6 – ஜன.14 காலங்களில் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நீங்கள் நினைத்தது நடந்தேறும். உடல் பாதிப்பு, வியாபாரத்தில் ஏற்பட்ட தடை, பணியில் உண்டான சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். துணிச்சலாக நடை போடுவீர்கள். 


பொதுப்பலன்:

அஷ்டம ஸ்தானத்தில் ராகு, சனி, தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் கேது சஞ்சரித்து உங்களை பயமுறுத்தினாலும், புதன் கால நிலையறிந்து உங்களைச் செயல்பட வைப்பார். வளைந்து கொடுக்க வேண்டிய இடத்தில் வளைந்தும், நிமிர்ந்து நிற்க வேண்டிய இடத்தில் நிமிர்ந்தும் உங்களை நிலைநிறுத்திக் கொள்வீர்கள். குருவின் பார்வைகளும், சூரிய, செவ்வாய் சஞ்சார நிலைகளும் எத்தகைய  ஆபத்திலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும் என்பதால் வழக்கமான வேலைகள் தடையின்றி நடந்தேறும். சுய ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருந்தால் நினைத்ததை சாதிப்பீர்கள். புதிய சொத்து. தொழில் என கனவுகள் நனவாகும்.


தொழில்: 

தொழிலில் பிறரை நம்பி செயல்பட்டு வந்த நிலை மாறும். அனைத்தையும் உங்கள் நேரடிப் பார்வையிலேயே நடத்துவீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். அரசுவழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். மினரல் வாட்டர், பால்பண்ணை, எக்ஸ்போர்ட், நிதி நிறுவனம், பைனான்ஸ், ரியல் எஸ்டேட், விவசாயம், இன்டஸ்ட்ரீஸ், ஹார்டுவேர், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், பங்கு வர்த்தகம், பப்ளிகேஷன்ஸ்,   யூட்யூப், ஐ.டி., லாபமடையும். கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் நிலை உயரும்.


பணியாளர்கள்:

அரசு ஊழியர்களில் தொடங்கி அனைத்து ஊழியர்களும் வேலையில் கவனமாக இருப்பதும், அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதும் அவசியம். ஜீவன ஸ்தானத்திற்கு சனியின் பார்வை உண்டாவதால் வேலையில் தவறு செய்பவர்களுக்கும், அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி ஆதாயம் அடைபவர்களுக்கும் இந்த ஆண்டு சோதனை, வேதனையைத் தரும். அதிகாரியின் வழிகாட்டுதல்படி செயல்படுவது நல்லது.


பெண்கள்:

எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். தனித்திறமை வெளிப்படும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். திருமணம், குழந்தை பாக்கியம், சொந்தவீடு அமையும். சுய தொழில் செய்பவர்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி மறையும். 8ல் ராகு, சனி சஞ்சரிப்பதால் கணவரின் உடல்நிலையில் கவனம் தேவை. 


கல்வி

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். மே 11 வரை 5 ம் இடத்திற்கு குருப்பார்வை இருப்பதால் பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும்.


உடல்நிலை:

ஏதாவது ஒரு வகையில் மருத்துவச்செலவு வந்து கொண்டே இருக்கும். நரம்புக்கோளாறு, மூச்சுத்திணறல், இதய பாதிப்பு, விபத்து என மருத்துவ மனைக்குச் செல்லும் நிலை ஏற்படும்.


குடும்பம்:

குடும்ப நலனில் அக்கறை உண்டாகும். சூழ்நிலையை உணர்ந்து நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். திருமணம், கிரகப்பிரவேசம் என சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வம்ச விருத்தி உண்டாகும். தம்பதிக்குள் இணக்கம் ஏற்படும். வாகனம், பொன், பொருள் சேரும். ஆனாலும் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. 


பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் அனைத்தும் விலகும். 

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2025 முதல் 13.4.2026 வரை) »
temple news
அசுவினி: நினைத்தது நிறைவேறும்.. நினைப்பது நடக்கும் தைரியமும், எதையும் சாதிக்கும் வலிமையும் கொண்ட ... மேலும்
 
temple news
கார்த்திகை: சூரியன் போல தனித்துவத்துடன் விளங்குபவராக நீங்கள் இருந்தாலும், 1ம் பாதமான மேஷத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: நல்லநேரம் வந்தாச்சு..: சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
மகம்: செயலில் கவனம்.. ஆத்மகாரகனும், ஞான மோட்சகாரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு,விசுவாவசு ... மேலும்
 
temple news
உத்திரம்.. முன்னேற்றம் உண்டாகும்: ஆத்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar