இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் தேரோட்டம் நடந்தது. இக்கோயிலில் மார்ச் 29 ல் கொடியேற்றத்துடன் பங்குனித் திருவிழா துவங்கியது. தினமும் இரவு 10 மணிக்கு அன்னம் , காமதேனு , சிம்மம் , வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன் தினம் பொங்கல் விழா சிறப்பாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டனர் . நேற்றுமுன்தினம் இரவு 8.20 மணிக்கு மின் சார அலங்காரத்துடன் கூடிய தேரோட்டம் நடந்தது. பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் செட்டியார் ,பாலகுமார் , ஆர்.ஐ., பிரபாகரன் , வி.ஏ.ஒ., இளஞ்செழியன் , உதவியாளர் மாதவன் , புக்குளி நாட்டார்கள் , தாயமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்றனர்.