மன்னீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்: சிவனடியார்கள் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2014 10:04
அன்னூர் : அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நடந்த திருவாசக முற்றோதலில், பல மாவட்டங்களிலிருந்து 1,000 சிவனடியார்கள் பங்கேற்றனர். அன்னூரில் 1,000 ஆண்டு பழமையான மன்னீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சிவபெருமான் மேற்கு நோக்கி வீற்றிருப்பதால், இக்கோவில் மேற்றலை தஞ்சாவூர் என்றும் அழைக்கப்படுகிறது. சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், திருவாசகம் படித்தல் துவங்கியது. தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து 1,000 சிவனடியார்கள் திருவாசகம் படித்தனர். பழநி துறவி ராஜம்மாள் துவக்கி வைத்தார். திருக்கழுக்குன்றம், தாமோதரன் தலைமையில் சிவனடியார்கள் பங்கேற்றனர்.பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள், கூனம்பட்டி ஆதீனம் மாணிக்கவாசக சாமிகள், தென்சேரிமலை முத்துகுமார சாமிகள் உட்பட பல மடாதிபதிகள் பங்கேற்றனர். சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கட்டளைதாரர் பழனிச்சாமி உட்பட திரளானவர்கள் பங்கேற்றனர்.