திருவிடைமருதூர் : தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் சீதா, லட்சுமணன், அனுமன், கோதண்டராமசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ராமநவமி விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் கடந்த மாதம் 31-ந் தேதி கொடியேற்றம் நடை பெற்றது. அது முதல் தினசரி காலை பல்லக்கிலும், மாலை பல்வேறு வாகனங்களிலும் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு காவேரிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடை பெற்றது.