அனுமந்த் வாகனத்தில்.. காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் வீதியுலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2014 12:04
காரைக்கால்: காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோவிலில் ராமநவமியை முன்னிட்டு அனுமந்த் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. காரைக்கால் பாரதியார் சாலையில் நித்யகல்யாண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ராமநவமியை முன்னிட்டு நேற்று உற்சவ நித்யகல்யாண பெருமாளுக்கு, அனுமந்த் வாகனத்தில் ராமர் திருக்கோலத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. முன்னதாக காலை 9 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.