பாலமேடு : பாலமேட்டில் செல்லத்தம்மன், காளியம்மன் பங்குனி பொங்கல் விழா சுவாமி சாட்டுதலுடன் துவங்கியது. அம்மன் கரகம் எடுத்தல், நகைப்பெட்டி ஊர்வலம், தீப்பந்த ஊர்வலம், வான வேடிக்கை நடந்தது. இரவு நெய்வேத்தியம், பழ அபிஷேகம் செய்து பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை பொது மகாசபை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.