சத்திரக்குடி : போகலூர் ஒன்றிய கிராமக் கோயில் பூஜாரி பேரவை கூட்டம், ஒன்றிய அமைப்பாளர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது. ஒன்றிய இணை அமைப்பாளர் மருதன், ஜெகதீஸ்வரன், சந்திரன், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். பூஜாரிகளின் 18 அம்ச கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் ஏற்காததாலும், நல வாரிய சலுகைகள் கிடைக்காததாலும் வரும் தேர்தலில் யாருக்கும் ஓட்டு போடுவதில்லை என தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட அமைப்பாளர் அன்புமாறன், திருப்புல்லாணி ஒன்றிய அமைப்பாளர் குமாரவேலு, மண்டல அமைப்பாளர் முனியாண்டி, பங்கேற்றனர். நாகலிங்கம் நன்றி கூறினார்.