திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், ஸ்டாலின் மனைவி துர்கா, சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை தொகுதியில், பிரசாரம் செய்ய, ஸ்டாலின், நேற்று முன்தினம் இரவு வந்தார். உடன், அவரது மனைவி துர்காவும் வந்தார். நேற்று காலை துர்கா, அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை வழிபட்டார். பின், நவக்கிரக சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டார்.