பதிவு செய்த நாள்
11
ஏப்
2014
12:04
திருவள்ளூர் : பூங்கா நகரில் உள்ள சிவா - விஷ்ணு கோவிலில், வரும், 13ம் தேதி, திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருவள்ளூர் அடுத்த, காக்களூர் பூங்கா நகரில் அமைந்துள்ளது சிவா - விஷ்ணு கோவில். இக்கோவிலில் உள்ள, ஜலநாராயணர் சன்னிதியில் ஏகாதசியை முன்னிட்டு, இன்று காலை, 9:00 மணிக்கு (ஏப்., 11ம் தேதி) சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. வரும் 13ம் தேதி, காலை 10:30 மணிக்கு, பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. சிவா - விஷ்ணு கோவிலில் உள்ள புஷ்பவனேஸ்வரருக்கும், பூங்குழலி அம்பிகைக்கும், சீனிவாச பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும், பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. பின்னர் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடக்கின்றன.