பதிவு செய்த நாள்
11
ஏப்
2014
12:04
ராசிபுரம்: அணைப்பாளையம் மாரியம்மன் கோவில், குண்டம் இறங்கும் விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ராசிபுரம் அடுத்த அணைப்பாளையத்தில், மாரியம்மன் கோவில் விழாவின், முக்கிய விசேஷ நாளான நேற்று அதிகாலை, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், அலகு குத்துதல், அக்னி சட்டி கரகம் எடுத்து, கோவில் முன்பு அமைக்கப்பட்ட, அக்னி குண்டத்தில் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (11ம் தேதி) காலை, மஞ்சள் நீராட்டு விழா, இரவு கம்பம் பிடுங்கி ஆற்றில் விடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.