சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ராமநவமி பூஜை நடந்தது. அதையொட்டி சீதா, ராமர், லஷ்மணன், ஆஞ்சநேயர் சாமிகளுக்கு அபிஷேகம் செய்து, லட்சார்ச்சனை நடத்தி, இரவு 8:00 மணியளவில் அலங்காரம் செய்து மகாதீபாராதனையை அர்ச்சகர் கணேஷ் சர்மா செய்து வைத்தார். ஆர்ய வைசிய சமூகத்தினர் வழிபாட்டில் பங்கேற்றனர்.