மொடக்குறிச்சி : ஈரோடு மாவட்டம், சிவகிரி அடுத்த தலையநல்லூரில் பொன்காளியம்மன் கோவில் திருவிழா பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான குதிரைகள் துலுக்குப் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் அம்மன் சன்னதி முன்பாக அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் பூஜை செய்யப்பட்டது. பின்னர், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தோளில் சுமந்து செல்லும் எடுப்புத் தேர் அலங்கரிக்கப்பட்டிருந்தது. படைக்கலம் எடுத்து வரப்பட்டு பூஜை செய்தவுடன், அம்மன் தேருக்கு எழுந்தருளினார். இன்று அம்மன் மஞ்சள் நீராட்டு விழா நிறைவு பெறுகிறது.